பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
பதிவு : மே 25, 2019, 03:34 AM
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் தக்ஷீலா எனும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், பயிலும் மாணவர்களுக்கு நடனம், மற்றும் நவ நாகரீக ஆடைகள் தயாரிப்பு குறித்து கற்றுத்தரப்படுகிறது. சர்தானா எனும் பகுதியில், உள்ள கட்டடத்தில் நான்காவது மாடியில் இயங்கி வந்த இம்மையத்தில் திடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது.

கொழுந்து விட்டு எரிந்த தீ மளமளவென அடுத்தடுத்த தளத்திற்கும் பரவியதால் மாணவர்கள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். ஒரு சிலர் உயிரை காப்பாற்றிக்கொள்ள 3 மற்றும் 4 வது மாடியிலிருந்து கீழே குதித்தனர். 

கட்டிடத்தில் இருந்து கீழே குதித்ததிலும், தீயிலும் சிக்கி இதுவரை 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மாணவர்கள் அலறியடித்தபடி கீழே குதிக்கும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. இக்காட்சிகள், சமூக வலைத்தளத்திலும் வேகமாக பரவி வருகிறது. 

இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாயை, இழப்பீடாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

56 views

சூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

49 views

அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா : பட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்

மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.

105 views

பிற செய்திகள்

கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 13,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

44 views

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, அவரது மகளே, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்து கொலை செய்தார்.

990 views

சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது

சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

45 views

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடலுக்கு இருதரப்பினர் உரிமை கோரல் : மரபணு சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவில் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலத்திற்கு இருதரப்பினர் உரிமை கோரியதால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

9 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

19 views

விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 4 பேர் கைது

சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.