எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? - இன்று அதிகாலை 5 மணி நிலவரம்
பதிவு : மே 24, 2019, 06:54 AM
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 287 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதுபோல, காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக தி.மு.க. 23 இடங்களில்,  வெற்றி பெற்றுள்ளது. ஐஜேகே, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், அது தி.மு.க. என கருதப்படுகிறது. எனவே, 3வது பெரிய கட்சியாக திமுக மாறும் வாய்ப்பு உள்ளது.  

இதுபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலை என 22 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதே போன்று ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றி உள்ளது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 9 தொகுதிகளில் வென்றுள்ளது.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. பஞ்சாபில் மட்டும் 1 இடத்தில் வென்றுள்ளது. 

பிற செய்திகள்

சூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு

"10 லட்சம் பேருக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் " - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி

189 views

குஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சோலார் மின் உற்பத்தி, விநியோகத்தில் இந்தியா முன்னணி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

20 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

25 views

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம் : சீறும் புலி பாயும்" - விரைவில் வெளியிடப்படும் என தகவல்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று சீறும் புலி எனும் தலைப்பில் படமாக உருவாக்கப்படுகிறது.

13 views

களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா - திரிணாமூல் காங். எம்.பி. நுஸ்ரத் ஜஹான் வழிபாடு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன.

7 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.