எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? - இன்று அதிகாலை 5 மணி நிலவரம்
பதிவு : மே 24, 2019, 06:54 AM
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 287 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதுபோல, காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக தி.மு.க. 23 இடங்களில்,  வெற்றி பெற்றுள்ளது. ஐஜேகே, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், அது தி.மு.க. என கருதப்படுகிறது. எனவே, 3வது பெரிய கட்சியாக திமுக மாறும் வாய்ப்பு உள்ளது.  

இதுபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலை என 22 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதே போன்று ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றி உள்ளது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 9 தொகுதிகளில் வென்றுள்ளது.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. பஞ்சாபில் மட்டும் 1 இடத்தில் வென்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி, நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார் திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

1201 views

காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வி - 15 மாநிலங்களில் ஒரு எம்.பி. கூட இல்லை

ஓடிசா ஆகிய 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு எம்.பி கூட காங்கிரஸ் கட்சி பெறவில்லை

198 views

பிற செய்திகள்

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

6 views

ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

15 views

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8 views

துள்ளல் புகைப்படம் : நித்யா மேனன் அசத்தல்

தமிழில் மெர்சல் படத்திற்குப்பின் சிறிய இடைவெளி விட்டு இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

8 views

அஜித் புதிய படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற ஆகஸ்டு 10 - ம் தேதி திரைக்கு வரும் நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12 views

மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு

ஜோலார்பேட்டை பகுதியில் மாலை வேளையில் பலூன் வியாபாரம் செய்யும் வட மாநில பெண்கள் 5 பேர் பகல் நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.