எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
பதிவு : மே 24, 2019, 05:59 AM
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி,  பா.ஜ.க.  263 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுபோல, காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.  அதற்கு அடுத்ததாக தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஐஜேகே,  மதிமுக, விசிக, கொங்கு மக்கள் கட்சி ஆகியவையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், அது தி.மு.க. என கருதப்படுகிறது. எனவே, 3வது பெரிய கட்சியாக திமுக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றியும், 5 இடங்களில் முன்னிலை என 22 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதே போன்று ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனா 18 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது.  மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை கைப்பற்றுகிறது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 9 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிகாலை 2 மணி நிலவரப்படி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு இடங்களிலும் வெற்றிபெறவில்லை. பஞ்சாபில் மட்டும் 1 இடத்தில் வென்றுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

762 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

387 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

202 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

163 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

99 views

பிற செய்திகள்

கொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

2 views

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - "தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்

புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

6 views

108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு

மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

25 views

ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம் - ஜூன் 8 முதல் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்

வழிபாட்டு தலங்களை ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசின் முறையான அறிவிப்புக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

64 views

இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

52 views

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.