100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை

நூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, நூறு சதவீதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுமாறு,காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 22 எதிர்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையரிடம், கோரிக்கை விடுத்துள்ளன. டெல்லியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 22 கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது, ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் முரண்பாடுகள் தென்பட்டால்,அந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளையும், ஒப்புகை சீட்டுகளுடன், நூறு சதவீதம் சரிபார்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்