தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பதிவு : மே 17, 2019, 11:05 PM
வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும் அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
நாட்டின் பொதுத் தேர்தல் முடிவடைய உள்ள 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை பிரதமர் நடத்துவது முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும், அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக அமைந்து  இருந்ததாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, மோடி தான் என்ன பேச வேண்டுமோ அதனை எவ்வித தடையுமின்றி பேசியதாகவும், ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அவ்வாறு செயல்பட ஆணையம் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மோடி பிரசாரம் செய்ய ஏதுவாக பொதுத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்திருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜ.க. மற்றும் மோடி அளவுக்கு அதிகமான பணத்தை கொண்டிருந்ததாகவும், காங்கிரஸ் உண்மையை மட்டும் நம்பி மக்களை சந்தித்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வெற்றி பெற்ற நிலையிலும்,  ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக கூறுவதில் பெருமைபடுவதாக ராகுல் காந்தி கூறினார்.நரேந்திர மோடி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மரியாதை உள்ளது என்றும், அவரது குடும்பத்தை பற்றி தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். மோடி விருப்பப்பட்டால் தமது குடும்பத்தை பற்றி விமர்சித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்த நேரத்திலேயே, ராகுல் காந்தியும் செய்தியாளர்களை சந்தித்ததால் பரபரப்பான நிலை உருவானது

தொடர்புடைய செய்திகள்

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

101 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

86 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

189 views

பிற செய்திகள்

அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்...

மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

64 views

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​.

116 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 views

இன்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகிறார் ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவையின் புதிய சபாநாயகரக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.

55 views

ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை

சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

20 views

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.