"மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்" - தெலங்கானா ராஷ்டிரிய சமீதி செய்தி தொடர்பாளர்
பதிவு : மே 15, 2019, 04:37 PM
தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆதரவுடன் 3வது அணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார். மூன்றாவது அணிக்கு தி.மு.க.வை வருமாறு, ஸ்டாலினை சந்தித்த போது சந்திரசேகர ராவ் வலியுறுத்தியதாகவும், மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதன் தற்போதைய அவசியத்தை ஸ்டாலினிடம், சந்திரசேகர ராவ் விளக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே,மே 23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் முக்கிய காரணியாக இருக்காது என்றும், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 3வது அணிக்கு வந்து விடும் என தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சித் செய்தி தொடர்பாளர் அபீத் ரசூல் தெரிவித்துள்ளார். அந்த சூழ்நிலையில் மூன்றாவது அணி தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு வேளை எண்ணிக்கை குறையும் பட்சத்தில், காங்கிரஸ் தாமாக ஆதரவளிக்க முன்வந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், பா.ஜ.க. உடன் எவ்வித ஒட்டும் உறவும் கிடையாது என்றும், இது மதச்சார்பற்ற கூட்டணி மட்டும் தான் என்றும் ரசூல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னர் தெலங்கானா ராஷ்டிரிய ச​மீதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேர்தல் முடிவுக்கு பின்னர், ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெற்று பிரதமராக வருவார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

448 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11752 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

722 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

29 views

காய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

36 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

33 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

15 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 views

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.