கொல்கத்தாவில் நடந்த பிரமாண்ட பேரணியில் பரபரப்பு
பதிவு : மே 15, 2019, 11:45 AM
மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில், அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில், அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் மீதமுள்ள  9 மக்களவை  தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கொல்கத்தா தொகுதியில் அமித் ஷா தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பேரணி, நிறைவு பெறும் சமயத்தில், திடீரென மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அமித் ஷா சென்ற வாகனம் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மர்ம கும்பலை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், கொல்கத்தா நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.