சித்தராமையாவை விமர்சித்த ம.ஜ.த. மாநில தலைவர்

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது.
சித்தராமையாவை விமர்சித்த ம.ஜ.த. மாநில தலைவர்
x
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த அரசு அமைந்து 11 மாதங்களை கடந்துள்ள நிலையில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் சித்தராமையா சிறந்த தலைவர், அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  எம்.பி பாட்டில் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் விஸ்வநாத், குமாரசாமியின் 5 வருட ஆட்சிக்கு பிறகு வரும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையாவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வயிற்றெரிச்சல் காரணமாக விஸ்வநாத் இவ்வாறு பேசி வருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.இரு கட்சிகளிடையே வார்த்தைபோர் நாள்தோறும் 
நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்