ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
x
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 5 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்த பானி புயலால், பூரி மாவட்டத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதேபோல கேந்திரபாராவில் 3 பேர், மயூர்பஞ்சில் 4 பேர், ஜெய்ப்பூரில் 3 பேர் கட்டக்கில் 6 பேர் மற்றும் கோர்தாவில் 9 பேர் பலியாகி உள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 25 பேர் சுவர் இடிந்து விழுந்ததிலும், 20 பேர் மரம், மின்கம்பங்கள் கீழே விழுந்ததில் சிக்கியும், 6 பேர் இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்த நிலையில், 13 பேர் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீடுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் தொடங்கி ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ஜூன் ஒன்றாம் தேதி  முதுல் வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்