ஆன்லைன் தரிசன சேவை டிக்கெட் மூலம் மோசடி : மோசடி செய்தவரை கைது செய்தது போலீஸ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி பக்தர்களிடம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் தரிசன சேவை டிக்கெட் மூலம் மோசடி : மோசடி செய்தவரை கைது செய்தது போலீஸ்
x
குண்டூர் மாவட்டம் வெங்கலபள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், ஆன்லைன் மூலம்  தரிசன டிக்கெட், அறை, லட்டு ஆகியவற்றை பெற்று தரும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு திருப்பதியில் தரிசனத்துக்காக,  5 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் ஸ்ரீனிவாஸ் திருப்பதி வந்தபோது கார்த்தி தனது தொடர்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து திருமலையில் உள்ள தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரியிடம் புகார் அளித்ததை அடுத்து கார்த்தியின் செல்போன் எண், வங்கி கணக்கை ஆதாரமாக வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருமலையில் உள்ள மடங்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அறைகள் மற்றும் லட்டு பெற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும், சில நேரத்தில் பக்தர்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்