தண்ணீரில் வெப்பம் தணிக்கும் புலி, யானை : உயிரியல் பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

ஒடிசா மாநிலம் நந்தன்கனன் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் மூவாயிரத்து ஐநூறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தண்ணீரில் வெப்பம் தணிக்கும் புலி, யானை : உயிரியல் பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
x
ஒடிசா மாநிலம் நந்தன்கனன் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் மூவாயிரத்து ஐநூறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், கரையை கடந்த பானி புயலில் உயிரியல் பூங்கா கடும் சேதத்தை சந்தித்தது. அதிர்ஷ்டவசமாக ஒரு உயிரினத்துக்கு கூட எந்தவித காயமும், சேதம் ஏற்படவில்லை என கூறும் பராமரிப்பாளர்கள், அவற்றை பாதுகாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினர். இதன் ஒருபகுதியாக வெப்பத்திலிருந்து, சிங்கம், புலி, கரடி, யானை, நீர் யானை உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தண்ணீரில் குளிக்கும் யானை,  நீர் யானை, புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்