வேலைவாய்ப்பு தொடர்பாக தனியார் பல்கலைக்கழகம் ஆய்வு

வேலை வாய்ப்புகளை அதிகரிக்க சுகாதார திட்டங்களில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று தனியார் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு....
வேலைவாய்ப்பு தொடர்பாக தனியார் பல்கலைக்கழகம் ஆய்வு
x
இந்தியாவின் வேலைவாய்ப்புகள் குறித்து அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் சில பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது. அதில் ஒன்று, மருத்துவ வசதி கோருவதை, சட்டரீதியான உரிமையாக மாற்ற  வலியுறுத்தியதாகும். இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைகள் உருவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கை, 2018ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, ஆய்வு நடத்தி வெளியிட்ட அகில இந்திய சர்வே முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. அந்த சர்வேயில், வேலை வாய்ப்புகளுக்கு அடுத்து தரமான மருத்துவ வசதிகள் பற்றிய கவலைகள் தான், வாக்காளர்களுக்கு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை பொதுமருத்துவத்திற்காக நபர் ஒருவருக்கு 1,235 ரூபாய் செலவிடப்படுகிறது. குறைந்த தொகையில் இருந்து அதிக தொகை ஒதுக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 13வது இடத்தில் உள்ளது. பொது மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலமும் மருத்துவ உள்கட்டமைப்புகளில் உள்ள பற்றாக்குறையை சரி செய்வதன் மூலமும் சுமார் 4.1 லட்சம் முதல் 6.2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழக அறிக்கை கூறியுள்ளது. மருத்துவத்துறையில் தற்போது உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையில் இது 8 முதல் 12 சதவீதம் ஆகும். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கையில் இது 4.5 முதல் 7 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்