மத்தியில் மோடி, ராகுலுக்கு மாற்று யார்?

மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் அனைவருக்கும் ஏற்புடைய பிரதமரை தேடும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.
மத்தியில் மோடி, ராகுலுக்கு மாற்று யார்?
x
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 437 தொகுதிகளில் தனித்து போட்யிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 421 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 122 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பாஜக, காங்கிரஸ் கூட்டணி அல்லாத அணியில் மொத்தம் 19 கட்சிகள் உள்ளன. இதில் பகுஜன் சமாஜ் , திரிணாமுல் காங்கிரஸ், திமுக,  சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் சுமார் 153 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 180 அல்லது அதற்கும் குறைவான இடங்களில் வென்றால் அதனால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்படும். அப்போது மூன்றாவது அணியின் துணையின்றி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும். தேர்தல் முடிவுகளை பொறுத்தே இது இருக்கும். இதனையடுத்து மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். சென்ற டிசம்பர் மாதம் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைசசர் மம்தா பானர்ஜியை அவர் சந்தித்தார். அண்மையில் கேராள சென்ற சந்திரசேகர ராவ், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆந்திராவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியை ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று கருதப்படுகிறது. சந்திர சேகர ராவுக்கும் ஜகன்மோகன் ரெட்டிக்கும் இடையே நல்லுறவு உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெறுவதை தடுக்க சந்திரசேகர ராவ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் மூலம் பிரதம வேட்பாளராக சந்திரபாபு நாயுடு வருவதையும் தடுக்க முடியும். இதேபோல் ஸ்டாலின், பினராயி விஜயன், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், குமாரசாமி ஆகியோர் தங்கள் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். இதை விட்டு விலகி தேசிய அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. எனவே சந்திர சேகர ராவ் 3 வது அணி விவகாரத்தில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். 
டெல்லி அரசியலுக்கு சந்திரசேகர ராவ் செல்லும் பட்சத்தில் தெலுங்கான முதல்வராக பொறுப்பேற்க அவரின் மகன் கேடிஆர் ராவ் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்து, அடுத்த பிரதமராக பொறுப்பேற்க தயார் என்பதை சந்திரசேகர ராவ் உணர்த்தியுள்ளார். மே 23க்கு பிறகு, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால்,காங்கிரஸ், பாஜக அல்லாத அரசு அமைக்க்கும் திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்