அரசுப் பேருந்தை திருடி காயிலாங்கடையில் விற்ற கொள்ளையர்கள்

ஐதராபாத்தில் பலே கொள்ளையர்கள் இருவர் அரசுப் பேருந்தை திருடிச்சென்று காயிலாங்கடையில் போட்டு காசு பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
அரசுப் பேருந்தை திருடி காயிலாங்கடையில் விற்ற கொள்ளையர்கள்
x
தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் நி்றுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை கடந்த 24 ம் தேதி இரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பேருந்து டிரைவர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடி செல்லப்பட்ட பேருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.அப்போது, மகாராஷ்டிராவின் நாந்தேடு பகுதியை நோக்கி பேருந்தை திருடியவர்கள் ஓட்டி சென்றது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து, நாந்தேடில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொக்கரில் உள்ள காயலான் கடையில் பேருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், பேருந்தின் பாகங்கள், பேருந்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஒரு ஆட்டோ,13 ஆயிரம் ரூபாய் பணம்  உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், பேருந்தை திருடிய இரு கொள்ளையர்களை கைது செய்தனர்.மேலும் காயிலான் கடை உரிமையாளர்கள் இருவருடன், கடை ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரையும் கைது செய்த போலீசார் பின்னர், நடத்திய விசாரணயில் விசாரனையில் பேருந்தை திருடி சென்று 60 ஆயிரம் ரூபாய்க்கு காயலான் கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்