ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் போலியாக தயாரிப்பு : 10 பேர் கொண்ட வடமாநில கும்பல் சுற்றி வளைப்பு

ஏடிஎம் கார்டுகளை போலியாக தயாரித்து ஏராளமான வங்கி கணக்குகளில் இருந்து 3 கோடி ரூபாய் எடுத்த வடமாநில கும்பலை தெலங்கானா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் போலியாக தயாரிப்பு : 10 பேர் கொண்ட வடமாநில கும்பல் சுற்றி வளைப்பு
x
ஐதராபாத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவரின் கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் பல லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சைபராபாத் காவல் துணை ஆணையர் ரோகிணி பிரியதர்ஷினி தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைத்து 'ஆபரேஷன் துரியோதன்' என்ற பெயரில் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் சாலை வசதி கூட இல்லாத 'ஜண்டாரா' என்ற கிராமத்தை சேர்ந்த துரியோதனன் என்பவரின் தலைமையிலான 10 பேர் கும்பல் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து, வங்கி கணக்குகளில் இருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் எடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கூலி தொழிலாளர்களை போல ஜார்கண்டில் முகாமிட்டு, அந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து ஐவிஆர்எஸ் முறையில், வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் பண இருப்பை அக்கும்பல் தெரிந்து கொள்வதோடு, லட்சக்கணக்கில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பெயரில் போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பதினைந்தே  நாட்களில் 900 சிம் கார்டுகள் மூலமாக, 3 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை திரட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்