தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் எதிரொலி : இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகள் குறைவு
தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பிற்கும் சென்னைக்கும் இடையே தினமும் 20 விமான சேவை உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானங்களில் 30ல் இருந்து 40 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். தொடர் குண்டுவெடிப்பின் காரணமாகவே பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு வழியாக இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல கூடிய பயணிகள் மட்டுமே கொழும்புவிற்கு பயணிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story