ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இன்று முதல் வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ராணுவம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதிகாரிகள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள பணியிடங்களுக்கு பெண்கள், ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என குடியரசுத் தினவிழாவின் போது பிரதமர் மோடி அறிவித்தார்.இந்நிலையில், அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் நன்னடத்தை மற்றும் ஒழுக்கம் தொடர்பான நடைமுறைகளை ராணுவ போலீசார் உறுதி செய்து வருகின்றனர். இதுதவிர காங்கோ, சோமாலியா, சீயரா லீயோன் மற்றும் ரூவாண்டா உள்ளிட்ட நாடுகளில் ஐ.நா. பணியிலும் ராணுவ போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பணிகளில் பெண்களை சேர்க்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story