நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்

மோகன்லாலிடம் ஆதரவு கோரிய நடிகர் சுரேஷ் கோபி
நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், நேற்று பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போட்டு சென்று ஆதரவு கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. எர்ணாகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ராஜீவ், பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அல்போன்ஸ், ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர். இதேப்போல, திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ்கோபியும் மோகன்லாலை சந்தித்து ஆதரவு கோரினார். மூன்று பேரையும் இன்முகத்தோடு வரவேற்ற நடிகர் மோகன்லால் அவர்கள் வெற்றி பெறுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறி வழியனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்