வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்

போதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்
வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்
x
திருப்பதி அருகே திருச்சானூரில் வசித்து வருபவர் ஷங்கர். கார் மெக்கானிக்  தொழில் செய்து வரும் இவர், வார விடுமுறை என்பதால் நேற்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.தனது வீட்டில் படுக்கை அறையில் இருந்தபடி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து பேசி வந்துள்ளார்.அப்போது தான் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக கூறி உள்ளார்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்,வேண்டாம் என்று கூறி உள்ளார்.அப்போது சேலையால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல் ஷங்கர் விளையாட்டு காட்டி உள்ளார்.இதனை  கண்ட நண்பர் வேண்டாம் வேண்டாம் என்று கத்திக்கொண்டே அவரது பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அப்போது ஷங்கர் ஒரு கையில் சேலையை பிடித்தவாறு பேசியபோது எதிர்பாராதவிதமாக, கால் தவறி, தூக்கில் தொங்கினார். உடனே சுதாரித்துக் கொண்டு ஷங்கர் எழுந்த போதும் கால் தவறியதால் போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் தொங்கியபடி உயிரிழந்தார்.இந்த காட்சி வீடியோ அழைப்பு மூலமாக கண்ட நண்பரின் செல்போனில் பதிவாகி உள்ளது. தகவல் அறிந்து பெற்றோர்கள் ஷங்கரை மீட்பதற்குள் அவரது உயிர் பிரிந்தது.விளையாட்டு வினையாகும் என்ற பழமொழிக்கேற்ப நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்