"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்

மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்
x
கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் ஆயிரத்து 938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5 ஆயிரத்து 387 கிலோ தங்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும், ஆயிரத்து 381 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளதாகக் கூறிய அவர், மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது  என்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்யப்படிருந்த ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வங்கி அதிகாரிகள் சென்னையிலிருந்து திருப்பதிக்கு கொண்டு வரும் போது தேர்தல் அதிகாரிகள் பிடித்ததாகவும்,  உரிய ஆவணங்களை வழங்கி தங்கத்தை மீண்டும் கொண்டு வந்ததாகவும் அவர்  கூறினார்.  திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 3 தங்க கிரீடங்கள் காணாமல் போன சம்பவத்தில் ஆயிரத்து 351 கிராம் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்