அபிநந்தன் இடமாற்றம் : மேற்கு மண்டலத்தில் முக்கிய பொறுப்பு

இந்திய விமான படையின் விமானி அபிநந்தன் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபிநந்தன் இடமாற்றம் : மேற்கு மண்டலத்தில் முக்கிய பொறுப்பு
x
இந்திய விமான படையின் விமானி அபிநந்தன் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்பு படை பிரிவின் ஸ்ரீநகர் விமான படையில் விங் கமாண்டராக அபிநந்தன் பணியாற்றி வந்தார். காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது விமான கோளாறு காரணமாக பாகிஸ்தான் பகுதியில் விழுந்து மீண்டு வந்த அபிநந்தன், மீண்டும் விமானப்படை பணிக்கு திரும்பி இருந்தார். இந்த நிலையில் மேற்கு மண்டல விமானப் படையின் முக்கிய பொறுப்புக்கு அவர் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்