கர்நாடக அமைச்சரின் வீட்டில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி

கர்நாடக அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக அமைச்சரின் வீட்டில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி
x
வருமான வரித்துறை அதிகாரிகளை கர்நாடகாவிற்கு வரவழைத்து, தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தி அரசியல் ரீதியாக பழி தீர்த்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்ட ராஜு-வின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்