நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்
பதிவு : மார்ச் 24, 2019, 10:00 AM
ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7, 8 பேர் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்தியதற்காக பாகிஸ்தான் நாட்டையே குற்றம் சொல்வதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசகரும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார தலைவருமான சாம் பிட்ரோடா,சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா,சாம் பிட்ரோடாவின் கருத்தை ராகுல் ஆதரிக்கிறாரா என்றும் புல்வாமா தாக்குதல் வழக்கமான ஒரு சம்பவமா என்பதை ராகுல் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டிற்கு எதிரான கருத்தை ஆதரிப்பதும், நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பதும் ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.மேலும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் தீவிரவாதிகளும் காரணமில்லை என்றால் வேறு யார் காரணம் என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றும் ​கேள்வி எழுப்பியுள்ளார்.தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தாமல் பேச்சு வார்த்தை மூலம் தான் அணுக வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கையா என்பதையும் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3503 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1039 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4084 views

பிற செய்திகள்

நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்

மோகன்லாலிடம் ஆதரவு கோரிய நடிகர் சுரேஷ் கோபி

6 views

வீடியோ கால் செய்து தூக்கு மாட்டி விளையாட்டு காட்டிய இளைஞர்

போதையில் கால் தவறி தூக்கில் தொங்கி உயிரிழந்த சோகம்

266 views

வாகா எல்லையில் பிடிபட்ட இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டு எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

9 views

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதியை திரும்ப பெறுக - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

16 views

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

56 views

"ஏழுமலையான் கோவிலில் 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது" - கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல்

மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக, கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.