ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் - ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு
ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் - ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை
x
ரியல் எஸ்டேட் துறைக்கான புதிய வரி விகிதங்களுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.  மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 34 வது கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33 வது கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன.  ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து இந்த வரி விகிதங்கள் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.   கடந்த மாத கூட்டத்தின் போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கு ஒரு சதவீதமாகவும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்