கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
பதிவு : மார்ச் 19, 2019, 07:36 AM
மாற்றம் : மார்ச் 19, 2019, 08:02 AM
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கார் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, சபாநாயகர் பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்பவனில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் மிருதுளா சின்ஹாபதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் அடக்கம். 40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என ஆளுனரை சந்தித்து காங்கிரஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

346 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12156 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

906 views

பிற செய்திகள்

மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

0 views

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5 views

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

33 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

29 views

வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

77 views

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...

மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.