"மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறீர்கள்" - தினத்தந்திக்கு, பிரதமர் மோடி பாராட்டு
பதிவு : மார்ச் 13, 2019, 04:00 PM
வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தினத்தந்தி நாளிதழுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக தினத்தந்தி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்திருப்பது ஒரு வலுவான ஜனநாயகத்தில் முக்கியமானது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தலில் மக்கள் அதிகளவில்  வாக்களிக்க அவர்களை ஊக்கப்படுத்த  வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு -2017ல் விருது பெற்ற தந்தி டிவி

முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மிகச்சிறப்பாக செயல்பட்ட மின்னணு ஊடகமாக தந்தி டிவி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான தேசிய ஊடக விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி , தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு வழங்கியது குறிப்பிடதக்கது.


தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

48 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3774 views

பிற செய்திகள்

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

13 views

"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.

11 views

"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

14 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

95 views

"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

56 views

ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.