கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு : குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
பதிவு : மார்ச் 03, 2019, 09:09 AM
தண்டனையைஉறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த கல்லூரி மாணவி, கடந்த 2009 நவம்பரில் தற்கொலை செய்து கொண்டார். திராவிடமணி என்பவர்  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கியதே அவர் தற்கொலைக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றம், திராவிடமணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து திராவிடமணி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், தண்டனையை  உறுதி செய்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.