"70 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளை அடித்த கட்சி" - காங்கிரஸ் கட்சி வலைதளத்தில் இடம்பெற்ற குறிப்பால் சர்ச்சை

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி இணைய தளத்தில் இந்தியாவை 70 ஆண்டுகளாக கொள்ளை அடித்த கட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
70 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளை அடித்த கட்சி - காங்கிரஸ் கட்சி வலைதளத்தில் இடம்பெற்ற குறிப்பால் சர்ச்சை
x
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி இணைய தளத்தில் இந்தியாவை 70 ஆண்டுகளாக கொள்ளை அடித்த கட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வலைதளத்தில் கட்சி பற்றிய குறிப்பில் இந்தியாவின் மிக பழமையான கட்சி என்றும் 70 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளை அடித்த கட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பல்வேறு தரப்பினர் அதனை சுட்டிக்காட்டிய பிறகு அந்த வாக்கியம் திருத்தப்பட்டது. கவனக் குறைவு காரணமாக தவறுதலாக இந்தியாவை கொள்ளை அடித்த கட்சி என்ற வாக்கியம் இடம்பெற்று விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்