அஸ்திவாரத்துடன் வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி
பதிவு : பிப்ரவரி 20, 2019, 06:34 PM
சித்தூரில் அஸ்திவாரத்துடன் ஒரு வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள முருக்கம்பட்டு என்ற இடத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. அப்பகுதியில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடைபெறுவதை தொடர்ந்து, இவரது  வீடு இடிபடும் சூழல் உருவானது.  இதற்கு நஷ்ட ஈடு வழங்க அரசு உத்தரவிட்டும் கூட தான் பார்த்து கட்டிய வீட்டை இழக்க மனமில்லாத அவர், சென்னையை சேர்ந்த பாபு என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன், அவரது வீட்டை அஸ்திவாரத்துடன் மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணியில் ஈடுபட்டார். அதன் அடிப்படையில், ஜெர்மானிய தொழில்நுட்பத்தில் சுமார் 200 ஜாக்கிகள் அமைத்து, தினமும் 6 அடி வீதம் கடந்த 2 மாதங்களாக வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சிறு சேதாரமின்றி வீடு நகர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவு பெறும் என்று அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து ஏராளமான மக்கள் இப்பகுதிக்கு வந்து இந்த பணியை பார்த்து செல்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.