ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா
x
ஆண்டுதோறும் மாசி மாதத்தில், நடைபெறும் இந்த விழாவில்  அம்மனுக்கு  பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி,  இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, கோவில் அமைந்துள்ள சாலையில் பெண்கள்  பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக, கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பு என்ற பெரிய அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவ பட்டாதிரி தீ மூட்டி பொங்கலை தொடங்கி வைத்தார். 
தொடர்ந்து செண்டைமேளம் முழங்கப்பட்டது. இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்