தர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.
தர்ணா போராட்டத்தை தொடரும் புதுச்சேரி முதல்வர்
x
புதுச்சேரியில் 39 மக்கள் நல கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க கோரி, 5-வது நாளாக தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோரை இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு, கிரண்பேடி அழைத்திருந்தார். பேச்சுவார்த்தை நடுநிலையாக இருக்க வேண்டும் என்றால் தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தையின் போது கிரண்பேடியின் ஆலோசகர் தேவநிதிதாஸ் பங்கேற்க கூடாது எனவும் நிபந்தனை விதித்திருந்தார். முதல்வரின் இந்த கடித்ததிற்கு பதிலளித்த கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்காக அவசர அவசரமாக புதுச்சேரிக்கு திரும்பியதாகவும் ஆனால் பேச்சுவாரத்தையை எங்கு நடத்த வேண்டும், யாரை அழைக்க வேண்டும் உள்ளிட்ட 4 நிபந்தனைகளை முதல்வர் விதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என தெரிவித்துள்ள கிரண்பேடி அரசியல் லாபத்திற்காக முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போதும் பேச்சுவார்த்தைக்கு தான் தயாராகவே இருப்பதாகவும் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்