பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:45 AM
தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
ஒடிசா மாநிலத்தின் முதுபெரும் தலைவரான பிஜூ பட்நாயகின் மகன் நவீன் பட்நாயக், ஜனதா தள கட்சியில் இருந்து, 1997இல் வெளியேறி, பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 9 இடங்களில் வென்று, வாஜ்பாய் அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சரானார் நவீன் பட்நாயக். 1999 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 10 இடங்களில் வென்று, வாஜ்பாய் அமைச்சரவையில் மீண்டும் சுரங்கத் துறை அமைச்சரானார் நவீன் பட்நாயக். 2000ஆம் ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, 84 தொகுதிகளில் போட்டியிட்டு, 29.40 சதவீத வாக்குகள் பெற்று, 68 இடங்களில் வென்றது. அப்போது நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வராக பதவி ஏற்றார். 2004 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, 27.36 சதவீத வாக்குகள் பெற்று, 61 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2009 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து, 38.86 சதவீத வாக்குகள் பெற்று, 103 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில், மூன்றாவது அணியில் இணைந்து, 18 இடங்களில் போட்டியிட்டு, 37.24 சதவீத வாக்குகள் பெற்று, 14 இடங்களில் வெற்றி பெற்றது. 2014 ஒடிசா சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 43.4 சதவீத வாக்குகள் பெற்று, 117 இடங்களில் வென்று, ஆட்சியில் தொடர்ந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 44.10 சதவீத வாக்குகள் பெற்று, 21 இடங்களில் போட்டியிட்டு, 20 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 19 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக தொடரும் நவீன் பட்நாயக், 2019 தேர்தல்களையும் தனித்தே சந்திக்க தயாராகி வருகிறார்..

தொடர்புடைய செய்திகள்

ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்

ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

39 views

டிட்லி புயல் கரையை கடந்தது

டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

920 views

கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...

புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

106 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

341 views

பிற செய்திகள்

இரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு

வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

50 views

"இடதுசாரிகளை தோற்கடிக்க காங். முயற்சி" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

97 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

48 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

271 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

41 views

பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.