"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:36 AM
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சேவாக் , தாம் நடத்தி வரும் சேவாக் சர்வதேச பள்ளியில் உயிரிழந்த வீரர்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவச கல்வி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வீரர்கள் குடும்பத்தினருக்கு எது செய்தாலும் போதாது என்று குறிப்பிட்ட சேவாக், தம்மால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார். சேவாக்கின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.