உள்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:22 AM
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரா அமைப்பின் தலைவர் ஏ.கே.தசமனா, இந்திய புலனாய்வு அமைப்பின் கூடுதல் இயக்குநர் அரவிந்த் குமார், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இதில் பங்கேற்றனர். புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும், ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணியில், வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.