21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதை
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:10 AM
மாற்றம் : பிப்ரவரி 17, 2019, 03:13 AM
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவச்சந்திரன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது.
அரியலுார் மாவட்டம், கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து, சிவசந்திரனின் உடல் காஷ்மீரில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் சனிக்கிழமை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி


இதேபோல, மற்றொரு தமிழக வீரரான சுப்ரமணியனின் உடல், தூத்துக்குடி அருகே உள்ள அவரது சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்ரமணியன் உடல், சனிக்கிழமை காலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.