பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் - மோடி தலைமையில் நடைபெற்றது

ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவ படை வீரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் - மோடி தலைமையில் நடைபெற்றது
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்  படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். பாதுகாப்பு படை வீரர்களுக்கு  முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மோடி, அவர்களின் துணிச்சலின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்