காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம்...

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம்...
x
புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா அருகே, விடுமுறைக்கு பின்னர் பணிக்கு திரும்பிய வீரர்கள், இரண்டாயிரத்து 500 பேர், 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜெய்​ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் 350 கிலோ வெடிமருந்துகள் அடங்கிய ஸ்கார்பியோ வாகனத்தை, வீரர்கள் வந்த  பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் ஸ்ரீநகர் ராணுவ முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடவுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : ஐ.நா. பொதுச்செயலாளர் 'கடும் கண்டனம்'...



ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ க்யூட்டர்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சோனியா கண்டனம்...



மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், தனது இதயப்பூர்வமான வேதனையை பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்