"நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" - சந்திரபாபு நாயுடு

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது - சந்திரபாபு நாயுடு
x
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக கூறினார். ஆபத்திலிருந்து தேசத்தை காக்க வேண்டியது கடமை என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமது மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.எம். ஆகிய கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டை பாதுகாக்க, இரு கட்சிகளுடன் தேசிய அளவில் ஒன்றிணைந்து போராட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்