17 பேர் பலியான டெல்லி கரோல்பாக் ஓட்டல் தீ விபத்து
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:59 AM
டெல்லி கரோல்பாக் ஓட்டல் தீ விபத்தில் உயிரிழந்த 17 பேரில், இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பிரதிநிதிகளான அரவிந்த சிவகுமாரன் மற்றும் நந்தகுமார்  இருவரும் நேற்று மாலைதான் டெல்லிக்கு விமானத்தில் வந்து,  இந்த ஓட்டலில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வரும் டெல்லி காவல்துறை, மின் கசிவு காரணமாக  4-வது மாடியில் பற்றிய தீ,  மெல்ல மற்ற பகுதிகளுக்கு பரவியதாக கூறியுள்ளது. ஓட்டலில் 60 பேர் வரை தங்கி இருந்த நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் இறந்த தமிழகத்தை சேர்ந்த இருவரது உடல்களும் , உறவினர்களிடம் ஒப்படைக்க, தமிழக அரசு சார்பில் உதவி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

பிற செய்திகள்

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

3 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

7 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.