சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
x
பீகார் மாநிலம்  முஜாபர் நகரில் உள்ள விடுதியில் 14 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்திய நிலையில்,  இடைக்கால இயக்குநராக பதவியேற்ற நாகேஸ்வர ராவ், சிபிஐ இணை இயக்குநர் சர்மாவை மாற்றினார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் இன்று நேரில் ஆஜரானார். சிபிஐ சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், இது தொடர்பாக மன்னிப்பு கோருவதாகவும் நாகேஸ்வர ராவின் 32 ஆண்டுகால நீண்ட பணி அனுபவத்தை கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். எந்தவித உள்நோக்கத்துடனும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்