"ரகசியகாப்பு பிரமாணத்தை மோடி மீறிவிட்டார்"-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

ராணுவ அமைச்சருக்கு தெரியாத ரஃபேல் ஒப்பந்த ரகசியம், அனில் அம்பானிக்கு தெரிந்தது எப்படி? என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரகசியகாப்பு பிரமாணத்தை மோடி மீறிவிட்டார்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
x
 டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி ரபேல் தொடர்பான மின்னஞ்சல் பரிமாற்ற தகவல்களை வெளியிட்டு, சரமாரி கேள்வி எழுப்பினார். ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு தெரிந்தது எப்படி? என கூறிய அவர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்ததையும் சுட்டிக் காட்டினார்.  ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, அதை மீறி விட்டதாகவும், பாதுகாப்பு துறை அல்லாத ஒருவருக்கு ரஃபேல் ஒப்பந்த விவரம் தெரிந்தது எப்படி? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்