"தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்" - மக்களவையில் தம்பிதுரை பேச்சு
பதிவு : பிப்ரவரி 11, 2019, 02:14 PM
நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என மக்களவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் பேசிய தம்பிதுரை, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். ஜி.எஸ்.டி மற்றும் ரூபாய் நோட்டு நடவடிக்கை சிறுகுறு தொழிலாளர்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என விமர்சித்த தம்பிதுரை, நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றார்.  மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் நாடு வளர்ச்சி பாதையில் செல்வதை மறுப்பதற்கில்லை எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் எனவும் தம்பிதுரை பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

625 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4100 views

பிற செய்திகள்

அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

20 views

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2260 views

ரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.

11 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

15 views

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

7 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.