மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் வைகோ சந்திப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 03:01 PM
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் அவல நிலை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் எடுத்துரைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் அவல நிலை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் எடுத்துரைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், உச்சநீதிமன்றம் பட்டாசுக்கு தடை விதிக்காத போதும், பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகில் எங்குமே பசுமை பட்டாசுகள் தயாரிக்காத போது, பசுமை பட்டாசுகள் தயார் செய்ய சொல்லுவது,பேரீயம் உப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது என்ற தெரிந்தும், பேரீயம் உப்பின்றி பட்டாசு தயாரிக்க நிபந்தனை விதித்துள்ளது போன்ற உதாரணங்களை வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்த அவலங்களை எடுத்துரைப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அணுகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.