வாட்ஸ்அப் செயலியை தவறாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 06:37 PM
இந்தியாவில் தேர்தல் நேரத்தில் வாட்ஸ் அப் செயலியை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அதை அடையாளம் கண்டு தடுக்கும் முயற்சிகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் சர்வதேச தகவல் தொடர்பு அதிகாரி கார்ல் வூக் , பல்வேறு அரசியல்  கட்சிகள் வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தி வருவதை  கவனித்து வருவதாக​வும், தவறான செய்திகளை பதிவிட்டால், அந்த கணக்குகளை துண்டிக்க நேரிடும் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.  வாட்ஸ் அப் நோக்கத்துக்கு எதிராக உள்ள, எந்த கணக்குகளையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.