"வரும் 8-ம் தேதி வரை தர்ணா போராட்டம் தொடரும்" - மம்தா பானர்ஜி அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 05, 2019, 11:54 AM
சிபிஐ விசாரணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ள மம்தா பானர்ஜி, 8-ம் தேதி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவனம் மோசடி புகார் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் மெட்ரோ சினிமா முன்பு தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது போன்ற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கவே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், வரும் 8-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெற இருப்பதால் அதுவரை தனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

157 views

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

93 views

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

112 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

9 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

20 views

வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்

புதுச்சேரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் , பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது .

29 views

குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

22 views

பா.ஜ.க. மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு : டெல்லி முதல்வர் , துணை முதல்வருக்கு ஜாமின்

டெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

14 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி

ராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.