நாடாளுமன்ற பிரசாரத்தினை தொடங்கிய பாஜக...
பதிவு : பிப்ரவரி 03, 2019, 03:30 PM
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் பிரசாரத்தினை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் பிரசாரத்தினை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அதன் ஒரு  பகுதியாக 'பாரத் கே மான் கீ பாத்' என்கிற பிரசார திட்டத்தினை புதுடெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது என்றும், பல கட்சி ஆட்சியால் இந்தியாவை உலக அரங்கில் வலுவான நாடாக உருவாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  10 கோடி குடும்பங்களை சந்திக்கும் சங்கல்ப்  யாத்திரையை தொடங்க உள்ளதாகவும் அமித்ஷா  கூறினார்.  இந்த நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.