"திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ போலியானது" - திருப்பதி எஸ்பி விளக்கம்

திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் உலாவரும் செய்தி உண்மை இல்லை என்றும், அதை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.
திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ போலியானது - திருப்பதி எஸ்பி விளக்கம்
x
திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் உலாவரும் செய்தி உண்மை இல்லை என்றும், அதை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருப்பதி எஸ்பி அன்புராஜன், தெலங்கானாவின் வாரங்கலில் மகா காளியம்மன் கோவிலில், தீவிரவாத தாக்குதல் தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை கமாண்டோ போலீசார் நடத்தினர். இதனை படம்பிடித்த சிலர், அந்த வீடியோவை திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போலவும், அப்போது காரில் வந்த அவர்களை போலீசார் சுட்டதில் ஒரு தீவிரவாதி உயிரிழந்ததாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இத்தகைய உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது, சைபர் குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்தாமல், சமூக வலைத்தளங்களில் யாரும் பரப்பவேண்டாம் என்றும் அது சைபர் கிரைம் குற்றமாகும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்