மேகதாது - முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : ஜனவரி 23, 2019, 12:50 AM
மேகதாது அணைக்கு உடனடியாக தடை பெறுமாறு தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
* மேகதாது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு பதில் வரவில்லை எனவும் கர்நாடக அரசு கூறியிருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும்

* தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியும் கூட, மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

* தற்போது, தமிழக அரசு எந்த கருத்தையும் சொல்லவில்லை என்ற புதிய காரணத்தை கூறி, விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கி இருப்பதாகவும்

* தமிழகம் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட அனுமதிக்க முடியாது என கூறிய மத்திய அரசும், அந்த அறிக்கையை மகிழ்ச்சியுடன் பெற்றிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். 

* தமிழகத்தின் கருத்தை கேட்காமல் தயாரித்த அறிக்கையை எப்படி பெற்றுக் கொண்டீர்கள்..? என இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்கவில்லை என விமர்சித்துள்ள அவர், 

* மேகதாது விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல், விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும்

* அதே வாதத்தினை  உச்சநீதிமன்றத்தில் முன் வைத்து, மேகதாது அணை கட்டுவதற்கு உடனடியாக தடை பெற வேண்டும் என்றும் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின், தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2264 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

6174 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6892 views

பிற செய்திகள்

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

0 views

"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

7 views

ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

17 views

கோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

6 views

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.