ரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
பதிவு : ஜனவரி 22, 2019, 11:48 AM
ரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில்  சென்னையிலிருந்து வந்த 20 பேரிடம்  போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தாங்கள் வைத்திருக்கும் ஒரு பெட்டியில் சக்தி வாய்ந்த யுரேனியம், இரிடியம் ஆகிய உலோகங்கள்  இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவற்றை 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அதில் பித்தளை குடம், அலுமினிய ஒயர்,செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட சில பொருட்கள் இருப்பது தெரியவந்தது.  அந்த இளைஞர்கள் ரைஸ் புல்லிங் எனப்படும் மோசடி  கும்பலிடம் ஏமார்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.